Neerhirai: World Cup

Post Top Ad

Showing posts with label World Cup. Show all posts
Showing posts with label World Cup. Show all posts

Monday, 17 June 2019

World Cup: மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்தியா

இதுவரை உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 6 முறை எதிர் கொண்டு அனைத்திலும் இந்தியா வென்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 

பாகிஸ்தான் இன்னிங்ஸ்: 

40 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் மட்டும் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

35 ஓவர் முடிவின் போது மழை தொடர்ந்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் 5 ஓவரில் (36 பந்து) 136 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தற்போது கூட மழை தொடர்ந்து பெய்தாலும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா அருமையான வெற்றியை பெற அதிக வாய்ப்புள்ளது. 

35 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 166 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது. 

34.1வது ஓவரில் விஜய் சங்கரின் அருமையான பந்தில் பாக் கேப்டன் சர்ஃப்ரஸ் அகமது போல்ட்டாகி 12 ரன்னில் வெளியேறினார். 

அடுத்து ஹர்திக் வீசிய 27வது ஓவரின் 5, 6வது பந்தில் முறையே முகமது ஹஃபீஸ் 9 மற்றும் சோயிப் மாலிக் 0 அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். 

குல்தீப் யாதவின் அற்புதமான பந்தில் பாபர் அஜம் மற்றும் ஃபகர் ஜமன் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். 
9 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 34 ரன்கள் எடுத்துள்ளது. ஃபகர் ஜமன் 15*, பாபர் அஜாம் 11* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். 

விஜய் சங்கரின் முதல் பந்திலேயே விக்கெட்
புவனேஸ்வர் குமார் 4.4வது பந்து வீசும் போது கால் வழுக்கிவிட்டதால் காலில் வலி ஏற்பட்டதால் மீதி 2 பந்தை விஜய் சங்கர் வீசினார். விஜய் சங்கர் வீசிய முதல் பந்திலேயே (4.5 ஓவர்) இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

பாகிஸ்தானின் ஃபகர் ஜமன், இமாம் உல் ஹக் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். 
இந்தியா பேட்டிங்:

50 ஓவர் முடிவில் இந்தியா 336 ரன்களை குவித்துள்ளது. விஜய் சங்கர் 15*, கேதார் ஜாதவ் 7* ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
 

47.3வது ஓவரில் விராட் கோலி 65 பந்தில் 77 ரன் எடுத்திருந்த போது அமீர் பவுன்ஸர் பந்தில் விக்கெட்டை இழந்தார். 
46.4 ஓவரில் இந்தியா 305/4 ரன் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கபட்டுள்ளது. 

45.1 ஓவரில் தோனி 1 ரன் எடுத்திருந்த போது அமீர் பந்தில் அவுட்டானார். 

43.5 ஓவர்: ஹர்திக் பாண்டியா 26(19) [4s-2 6s-1] ரன் அடித்திருந்த போது அமீர் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். 

40 ஓவரில் முடிவில் இந்தியா 248/2 ரன்களை குவித்துள்ளது. கோலி 39*, பாண்டியா 5* ரன்கள் எடுத்துள்ளனர் 

35 ஓவர் முடிவில் இந்தியா 206 ரன்களை குவித்துள்ளது. ரோகித் 119*, கோலி 24 ரன்கள் எடுத்துள்ளனர் 

29.6 ஓவரில் ரோகித் சர்மா 85 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 

23.5 ஓவர்: அரைசதம் அடித்த கே எல் ராகுல் 57(78) [4s-3, 6s-2] ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 

கே எல் ராகுல் 70 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார். 

22 ஓவர் முடிவில் இந்தியா 123 ரன்களை குவித்துள்ளது. ரோகித் 69*, கே எல் ராகுல் 51 ரன்கள் எடுத்துள்ளனர் 

18 ஓவர் முடிவில் இந்தியா 101 ரன்களை குவித்துள்ளது. ரோகித் 61*, கே எல் ராகுல் 37 ரன்கள் எடுத்துள்ளனர். 

ரோகித் அரைசதம்: 
12ஓவர் முடிவில் ரோகித் சர்மா 35 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 

10 ஓவர் முடிவில் இந்தியா 53ரன்களை எடுத்துள்ளது. ரோகித் 37*, ராகுல் 14 ரன்கள் எடுத்துள்ளனர். 

9வது ஓவர்: முதல் பந்தில் ராகுல் அடித்த பந்தில் 2வது ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆக பார்த்தார். ஆனால் பாகிஸ்தானின் ஃபகர் அகமது கீப்பரிடம் பந்தை தூக்கிப் போடாமல், பவுலரிடம் போட்டதால் ரோகித் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். 

6 ஓவர் முடிவில் இந்தியா 36 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் 25*, ராகுல் 7 ரன்கள் எடுத்துள்ளனர். 

அமீருக்கு எச்சரிக்கை:பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் இரண்டு முறை மைதான பிட்ச்சின் முக்கியமான பகுதியில் கால் வைத்ததாக அம்பயர் எச்சரித்துள்ளார். மேலும் ஒரு முறை கால் வைத்தால் அவரால் தொடர்ந்து பவுலிங் செய்ய இயலாது. 

இந்தியா முதல் 4 ஓவர் முடிவில் இந்தியா 16 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் 14*, ராகுல் 2 ரன் எடுத்துள்ளனர். 

சிகர் தவான் விளையாடாததால் அவருக்கு பதிலாக கே எல் ராகுல் தொடக்க வீரராக ரோகித்துடன் களமிறங்கியுள்ளார். 

டாஸ்:டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது. 
இதுவரை 6 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் இந்தியா 5 முறை முதலில் விளையாடியும், ஒரே ஒரு முறை 2வதாக பேட்டிங் செய்து அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 
விஜய் சங்கருக்கு வாய்ப்பு:காயம் அடைந்த சிகர் தவானுக்கு பதிலாக இந்திய அணியில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 4வது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அணி விபரம்:இந்திய அணி விபரம்: 
Rohit Sharma, Lokesh Rahul, Virat Kohli(c), Vijay Shankar, MS Dhoni(w), Kedar Jadhav, Hardik Pandya, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Jasprit Bumrah 

பாகிஸ்தான் அணி விபரம்: 
Imam-ul-Haq, Fakhar Zaman, Babar Azam, Mohammad Hafeez, Sarfaraz Ahmed(w/c), Shoaib Malik, Imad Wasim, Shadab Khan, Hasan Ali, Wahab Riaz, Mohammad Amir 

Saturday, 15 June 2019

Fans Perform Special Prayer For Victory Of Team India Across Nation : இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல நூதன வழிபாடு!


வேலூரில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் வென்று உலக கோப்பையை வெல்ல, ஆறு அடி உயர மெகா அகர்பத்தியை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் டிட்டர் லைன் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ளது. இங்கு இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி வெல்லவேண்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

சைக்கிள் பியூர் நிறுவனத்தின் சார்பில், ஆறு அடி உயரம் கொண்ட மெகா சைஸ் அகண்ட ஜோதி அகர்பத்தியை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஏற்றி வைத்து பிரார்த்தனையை துவங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்தியா வெல்ல வேண்டுமென பிராத்தனை  செய்தனர். 

இதே போன்று இந்தியா முழுவதும் 100 இடங்களில் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், ஈரோடு, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய 6 இடங்களில் ஆறடி உயரத்திற்கு அகண்ட அகர்பத்தியை ஏற்றி இந்திய அணியின் வெற்றிக்காக வழிபாடு நடத்தினர். 

இந்த அகர்பத்தி இரண்டு நாட்களுக்கு இம்மாவட்டம் முழுவதும் சுற்றி வலம் வரும். இதில் பொதுமக்கள் தங்களின் பிரார்த்தனைகளை பதிவு செய்யும் ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். 

(தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர இது போல பிராத்தனை செய்தால் நன்றாக இருக்கும்.)

Sunday, 9 June 2019

India Vs Australia Icc World Cup 2019 : தவான், குமார், பும்ராவின் அசத்தலில் ஆஸ்திரேலியாவை அடித்து துரத்திய இந்தியா!

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 14வது போட்டியில் இன்று இந்திய அணி, வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. 

இந்தியா 36 ரன் வித்தி யாசத்தில் வெற்றி: 
44.5 வது ஓவரில் குல்டர் நைல், 46.6 வது பந்தில் கம்மின்ஸ், 49.1வது ஓவரில் ஸ்டார்க், 49.9வது பந்தில் ஜமா அவுட் என வரிசையாக அவுட்டாக 50 ஓவரில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாகி 316 ரன்களை மட்டும் எடுத்தது. 

மேக்ஸ்வெல் அவுட்:
 
சஹாலின் அசத்தல் சுழலில் சிக்கி அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 28 ரன்களில் அவுட்டானார். 

இரட்டை விக்கெட்: 
40வது ஓவரில் புவனேஸ்வர் குமார் ஸ்மித், ஸ்டோயின்ஸ் ஆகிய் இருவரை வீழ்த்தி அசத்தினார். 

38 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 222/3 ரன்களை எடுத்துள்ளது. ஸ்மித் 60, மேக்ஸ்வெல் 16 ரன்கள் எடுத்துள்ளனர். 

36.4 ஓவர்: குவாஜா 42 ரன் எடுத்திருந்த போது, பும்ராவின் பந்தில் போல்டாகி விக்கெட்டை இழந்தார். 

34 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 180/2 ரன்களை எடுத்துள்ளது. ஸ்மித் 53, குவாஜா 24 ரன்கள் எடுத்துள்ளனர். 

27 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 144/2 விக்கெட் இழந்துள்ளது. ஸ்மித் 36, க்வாஜா 6 ரன் எடுத்துள்ளனர். 

24.4வது ஓவரில் டேவிட் வார்னர் 56 ரன் எடுத்து சஹாலின் அசத்தல் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். 

20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 99/0 ரன்களை எடுத்துள்ளது. வார்னர் 45, ஸ்டீவ் ஸ்மித் 14 ரன்களை எடுத்து விளையாடி வருகின்றனர். 

பின்ச் அவுட்: 
13.1 ஓவர்: ஹர்திக் பாண்டியா பந்தில் 2 ரன்கள் எடுக்க நினைத்த வார்னரால், பின்ச் தனது விக்கெட்டை ரன் அவுட் மூலம் இழந்தார். கேதார் ஜாதவ் சரியாக ஹர்திக்கிடம் பந்தை எரிந்து விக்கெட் வீழ்த்த காரணமானார். 

10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 41/0 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 18*, பின்ச் 28* ரன்களை எடுத்துள்ளனர். 

353 என்ற கடின இலக்கை நோக்கி ஆடி வரும் ஆஸ்திரேலியாவுக்கு வார்னர், பின்ச் நிதானமாக விளையாடி வருகின்றனர். 


இந்தியா 50 ஓவர் முடிவில் 352 ரன்களை குவித்துள்ளது. சிகர் தவான் ரோகித் சர்மா 57, ஷிகர் தவான் 117 (109) என சிறப்பான தொடக்கம்கொடுக்க, அடுத்து விராட் கோலி 82, ஹர்திக் பாண்டியா 48 என அதிரடி காட்டி ரன்களை குவித்தனர். 

அடுத்து வந்த தோனி 27, கேஎல் ராகுல் 11 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து இந்தியா 352 ரன்களை எடுத்துள்ளது. 
46 ஓவர் இந்தியா 300+ ரன்களை கடந்து அசத்தி வருகின்றது. கோலி 71*, தோனி 0. 

45.5 ஓவரில் ஹர்திக் பாண்டியா 48 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் விக்கெட்டை இழந்தார். 

45 ஓவர் முடிவில் இந்தியா 293/2 ரன்களை குவித்துள்ளது. 

41 ஓவர் முடிவில் இந்தியா 246/2 ரன்களை எட்டியுள்ளது. கோலி 51 (56), ஹர்திக் பாண்டியா 15(11) ரன்களை எடுத்து சிறப்பாக ஆடி வருகின்றனர். 

கோலி அரைசதம்:
 
40.3 ஓவரின் போது இந்திய கேப்டன் விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார். 

36.6 ஓவர் - தவான் சதம் அடித்த நிலையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த போது, ஸ்டார்க் பந்தில் லயனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 

தவான் சதம்: 
95 பந்தில் சிகர் தவான் 11 பவுண்டரிகள் விளாசி சதம் கடந்து(100*+) அசத்தி வருகின்றார். 

22.3 ஓவர்: குல்டர் நைல் ஓவரில் ரோகித் சர்மா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 

ரோகித் அரைசதம் 
20.1 ஓவரில் ரோகித் சர்மா பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை கடந்தார். 60 பந்தில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரி அடித்து 50 ரன்களை கடந்தார். 
இந்தியா 100: 
19 ஓவர் முடிவில் இந்தியா 100/0 ரன்களை எட்டியுள்ளது. ரோகித் 44 (57), தவான் 53(57) ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். 
தவான் அரைசதம்: 53 பந்தில் 7 பவுண்டரிகள் அடித்து அரை சதம் விளாசினார். 

15 ஓவர் முடிவில் இந்தியா 75/0 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் 31, தவான் 41 ரன்கள் எடுத்துள்ளனர். 
10 ஓவர் முடிவில் இந்தியா 41/0 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் 11, தவான் 27 ரன்கள் எடுத்துள்ளனர். 

5 ஓவர் முடிவில் இந்தியா 18/0 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் 7, ஷிகர் தவான் 10 ரன்கள் அடித்துள்ளனர். 

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் பொறுமையாக சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர். 

டாஸ் வெற்றி: 
இந்தியா கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடிய அதே அணி வீரர்களுடன் இந்தியா விளையாடுவதாக கோலி தெரிவித்துள்ளார். 
ரோகித் சர்மா சாதனைகள்:கோலி தலைமையில் இந்தியா பேட்டின் செய்த போது ரோகித் விளாசிய ரன் விபரம் 

10 இன்னிங்ஸ் 
776 ரன்கள் 
சராசரி 77.60 
ஸ்டிரைக் ரேட் 113.61 
3 X 100s 
2 X 50s 
அதிகபட்சம்: 264 

அணி விபரம்: 
India (Playing XI): Shikhar Dhawan, Rohit Sharma, Virat Kohli(c), Lokesh Rahul, MS Dhoni(w), Kedar Jadhav, Hardik Pandya, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Jasprit Bumrah 

Australia (Playing XI): David Warner, Aaron Finch(c), Usman Khawaja, Steven Smith, Glenn Maxwell, Marcus Stoinis, Alex Carey(w), Nathan Coulter-Nile, Pat Cummins, Mitchell Starc, Adam Zampa 

world cup : ஆப்கானை ஒத்த ஆளாக அடிச்சு தூக்கிய வில்லியம்சன்: நியூசி., அசத்தல் வெற்றி!

ஆப்கான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது போட்டியில் வில்லியம்சன் அரைசதம் அடித்து அசத்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

டாவுண்டான்: ஆப்கான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது போட்டியில் வில்லியம்சன் அரைசதம் அடித்து அசத்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது. 

‘நம்பர்-1’ நியூசி.,: 
இதில் இன்று டாவுண்டானில் நடந்த போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்  முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆப்கான் அணி 50 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 


இந்நிலையில் இப்போட்டியின் நடுவே இரண்டு முறை லேசான மழை குறுக்கிட்ட போதும், ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. 

வில்லியம்சன் மிரட்டல்: 
எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில் முதல் பந்திலேயே ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். முன்ரோ (22) ஓரளவு கைகொடுத்தார். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் (48) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 


ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வில்லியம்சன் (79*) அரைசதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி 32.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை நீசம் வென்றார். 

Saturday, 8 June 2019

dhoni denied permission to wear gloves with insignia during world cup : ‘தல’ தோனியின் ‘பாலிதான்’ கிளவுசுக்கு தடை... பிசிசிஐ., கோரிக்கையை நிராகரித்த ஐசிசி.,!

இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் பாலிதான் முத்திரை கிளவுசுக்கு ஐசிசி., தடைவிதித்துள்ளது.

துபாய்: இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் பாலிதான் முத்திரை கிளவுசுக்கு ஐசிசி., தடைவிதித்துள்ளது. 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. 

ராணுவ முத்திரை: 
இதில் சவுத்தாம்டனில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது, முன்னாள் இந்திய கேப்டன் தோனி அணிந்திருந்த விக்கெட் கீப்பிங் கிளவுஸில் இந்திய பாரா ஸ்பெஷல் போர்ஸின் முத்திரையான ‘பாலிதான்’ (தியாகம்) இடம் பெற்றிருந்தது. 

நீக்க உத்தரவு: 
இது முறையான அனுமதி பெறாத காரணத்தாலும், விதிமீறல் என்பதால், ராணுவ முத்திரையை தோனி நீக்க உத்தரவிட வேண்டும் என  ஐசிசி.,, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பிசிசிஐ.,) உத்தரவிட்டது. 

ஆனால் கிரிக்கெட் வல்லரசான பிசிசிஐ., தோனியின் கிளவுசில் உள்ள முத்திரையை நீக்க முடியாது என்றும் அந்த முத்திரை வியாபார நோக்கமானதோ அல்லது, தனிப்பட்ட மதத்தையோ குறிப்பதல்ல, இந்தியாவின் உணர்வை வெளிப்படுவதாகும் என பதில் அளித்தது. 

ஐசிசி., பிடிவாதம்: 
இதற்கு அனுமதி பெற முறையாக பிசிசிஐ., அனுப்பிய கடிதம் கிடைத்ததாக தெரிவித்துள்ள ஐசிசி.,, ஆனால் தோனியின் கிளவுசில் உள்ள ‘பாலிதான் பேட்ஜ்’ எவ்வித அரசியல், மதம் மற்றும் இனத்துக்கான தகவல்களை கொண்டதல்ல என தோனி மற்றும் பிசிசிஐ., உறுதி செய்தால், இந்த கோரிக்கை பரீசீலிக்கப்படும் என ஐசிசி., தெரிவித்திருந்தது. 




தடை: 
இந்நிலையில் தொழில்நுட்ப குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்ட பின், ஐசிசி, போட்டிகளில் தனிப்பட்ட கருத்துக்கள், சின்னங்கள், வீரரின் ஆடை அல்லது உபகரணங்களில் இடம் பெறக்கூடாது. அதோடு, இந்த லோகோ விக்கெட் கீப்பர் கிளவுசில் வழங்கப்பட்டுள்ள விதிகளை மீறும் விதித்தில் உள்ளதாக தெரிவித்து பிசிசிஐ.,யின் கோரிக்கையை ஐசிசி., நிராகரித்து, தோனி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  அந்த கிளவுசை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. 

Thursday, 6 June 2019

India vs South Africa Highlights: மீண்டும் மண்ணைக்கவ்விய தென் ஆப்ரிக்கா.. இந்தியா அசத்தல் துவக்கம்!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






















தென் ஆப்ரிக்கா Vs இந்தியா ஸ்கோர் கார்டு



இந்திய அணி இன்னிங்ஸ்:

இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 
6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி 41 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் (100), தோனி (21) அவுட்டாகாமல் உள்ளனர். 


இந்திய அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் (95), தோனி (12) அவுட்டாகாமல் உள்ளனர். 


இந்திய அணி 27 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் (63), ராகுல் (20) அவுட்டாகாமல் உள்ளனர். 
இந்திய அணி 17 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் (33), ராகுல் (2) அவுட்டாகாமல் உள்ளனர். 
இந்திய அணி 7 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் (5), கோலி (1) அவுட்டாகாமல் உள்ளனர். 

இந்திய அணி 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் (8), தவான் (3) அவுட்டாகாமல் உள்ளனர். 
தென் ஆப்ரிக்க இன்னிங்ஸ்: 

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. ரபாடா (31) அவுட்டாகாமல் இருந்தார். 
தென் ஆப்ரிக்க அணி 47 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. ரபாடா (17), மோரிஸ் (38) அவுட்டாகாமல் உள்ளனர். 

தென் ஆப்ரிக்க அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. ரபாடா (15), மோரிஸ் (11) அவுட்டாகாமல் உள்ளனர். 

தென் ஆப்ரிக்க அணி 39 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. பிளக்வாயோ (15) அவுட்டாகாமல் உள்ளனர். 

தென் ஆப்ரிக்க அணி 32 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. மில்லர் (27), பிளக்வாயோ (15) அவுட்டாகாமல் உள்ளனர்.

தென் ஆப்ரிக்க அணி 23 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. மில்லர் (7) அவுட்டாகாமல் உள்ளார். 

தென் ஆப்ரிக்க அணி 17 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளசி (34), டுசென் (19) அவுட்டாகாமல் உள்ளனர். 

தென் ஆப்ரிக்க அணி 8 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளசி (11), டுசென் (3) அவுட்டாகாமல் உள்ளனர். 

முதல் 50 ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள்! 
91 முகமது ஷமி 
87 குல்தீப் (44 ஒருநாள்) 
86 பும்ரா 
82 இர்பான் பதான் 
80 அஜித் அகார்கர் 
77 ஜாகிர் கான் 

அவுட்! டிகாக் (கே) கோலி (ப) பும்ரா 10(17) [4-1] 

தென் ஆப்ரிக்க அணி 5 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளசி (6), டிகாக் (9) அவுட்டாகாமல் உள்ளனர். 

அவுட்! ஆம்லா (கே) ரோகித் (ப) பும்ரா 6(9) [4-1] 

தென் ஆப்ரிக்க அணி 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஆம்லா (1), டிகாக் (3) அவுட்டாகாமல் உள்ளனர். 

தென் ஆப்ரிக்க அணி 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது. ஆம்லா (1), டிகாக் (1) அவுட்டாகாமல் உள்ளனர். 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது. 


முதல் சவால்: 
இதில் இந்திய அணி இன்று சவுத்தாம்டனில் நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் டுபிளசி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 



அணி விவரம்: 
இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கே), ராகுல், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, சகால், குல்தீப் யாதவ். 

தென் ஆப்ரிக்கா: குயிண்டன் டி காக், ஹசீம் ஆம்லா, டுபிளசி (கே) வான் டெர் டுசேன், மில்லர், டுமினி, பிளக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ஷாம்சி, ரபாடா, இம்ரன் தாஹிர். 

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

sigma2

Post Bottom Ad