இன்று வெளியாகும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை, எப்படி அறிந்து கொள்வது - இதோ வழி! - Neerthirai

Breaking

Post Top Ad

இன்று வெளியாகும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை, எப்படி அறிந்து கொள்வது - இதோ வழி!

தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர், மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்கு இன்று காலை 9.30 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
பிளஸ் டூ மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். 
https://www.dge2.tn.nic.in 
https://www.tnresults.nic.in
https://www.dge.tn.nic.in
https://www.dge.tn.gov.in
மேலும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்ப தேர்வு கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது. 

வரும் ஏப்ரல் 20 முதல் 26ஆம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு வரும் 22 முதல் 24ஆம் தேதி வரை பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலைப் பெற ரூ.275 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் தவிர பிற பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். அதில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும். 

மறுகூட்டல் மற்றும் மறு திருத்தத்திற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கட்டணம் செலுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பிளஸ் டூ தேர்வில் தோல்வியுற்றால், வரும் ஜூன் மாதம் துணைத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தேர்வு ஜூன் 6 முதல் 13 வரை நடக்கும் என்று கூறப்படுகிறது.

Post Bottom Ad