சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து! - Neerthirai

Breaking

Post Top Ad

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து!

தனியார் தொழிற்சாலை ஒன்றில் பற்றிய தீயால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் செராமிக், கண்ணாடி மூலம் பொம்மை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இது கடந்த 1985ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 

இந்நிலையில் நேற்று  இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென பற்றிய தீயால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் புகைமூட்டம் காரணமாக வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்கள் அருகில் செல்லாதவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Post Bottom Ad