சாலை நடுவே நாக பாம்பு படமெடுத்து அடியதால் வாகன ஓட்டிகள் அலறடித்து ஓட்டம் - Neerthirai

Breaking

Post Top Ad

சாலை நடுவே நாக பாம்பு படமெடுத்து அடியதால் வாகன ஓட்டிகள் அலறடித்து ஓட்டம்

நடுரோட்டில் திடீரென வந்த 7 அடி நீள நாகப் பாம்பால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போனார்கள். வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வராத நிலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பரபரப்பான சாலையில் திடீரென நல்ல பாம்பு குறுக்கிட்டு படமெடுத்து நின்றதால் வாகன ஒட்டிகள் அலறடித்து ஓடினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி உள்ளது. 

மாதவரத்திலிருந்து ரெட் ஹில்ஸ் நோக்கிச் செல்லும் ஜி.என்.டி கொல்கத்தா சாலை வழக்கம் போல பரபரப்பாக காணப்பட்டது. அப்போது கணபதிசத்திரம் சந்திப்பில் பெட்ரோல் நிலையம் அருகே ஒரு நல்ல பாம்பு வந்துவிட்டது. 

மேலும் அது நகர்ந்து ஊர்ந்து சென்று நடு சாலையில் வந்துவிட்டது. சுமார் ஏழு அடி நீளம் கொண்ட அந்த பாம்பை பார்த்து பலரும் பயந்து ஓடினர். வாகன ஓட்டிகள் வாகனத்தை செலுத்தாமல் நின்றனர். பார்க்கமால் சென்ற சிலரை பார்த்து படமெடுத்து ஆடியது. 

இது மேலும் அங்கியிருந்தவர்களுக்கு பீதியை கிளப்பியது. இதை பார்த்ததும் அந்த வழியாக நடந்தும், வண்டிகளிலும் போய் கொண்டிருந்தவர்களுக்கு திக்கென ஆனது. அலறியடித்து கூச்சலிட்டபடியே விலகி நடந்து ஓடி சென்றுவிட்டனர்.

Post Bottom Ad