சக உயிராய் எண்ணாமல் சாதிமட்டும் பார்ப்பீரோ...நத்தமேடு வன்முறையைக் கண்டித்து பிரபல பாடகர் எழுதிய கவிதை... - Neerthirai

Breaking

Post Top Ad

சக உயிராய் எண்ணாமல் சாதிமட்டும் பார்ப்பீரோ...நத்தமேடு வன்முறையைக் கண்டித்து பிரபல பாடகர் எழுதிய கவிதை...


’பொன்பரப்பியின் வெப்பம் தணிவதற்குள் கொழுந்து விட்டு எரிகிறது, நத்தமேடு. பா.ம.கவிற்கு வாக்களிக்காத ஒரு தலித் இளைஞனை அடித்திருக்கிறார்கள்.  பதட்டமான வாக்குச்சாவடி என்று அறிவிக்கப்பட்டிருந்த நத்தமேடில் பாமகவினரின் பேச்சை கேட்டு கேமரா கூட முறையாக பொருத்தாமல் இருந்தது,சாதி வெறிக்கும் அநீதிக்கும் துணை போகிறதா தேர்தல் ஆணையம்?’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கொந்தளித்து வருகின்றனர்.


இச்சம்பவங்களுக்கு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில், தனது முகநூல் பக்கத்தில், படிப்பவர்களை உலுக்கி எடுக்கும் கவிதை ஒன்றை பதிவிட்டிட்டிருக்கிறார் பிரபல பாடகரும், இளையராஜா இசைக்குழுவின் புல்லாங்குழல் கலைஞருமான அருண்மொழி என்கிற நெப்போலியன் செல்வராஜ்.


கதவில்லா வாயிலுக்குள்
களவாடற் கொன்றுமிலை
இல்லாமை நடனமிடும்
இவர்மேலா வன்மநிலை!

மெய்குலுங்க அழுகின்றார்
கையேற்றித் தொழுகின்றார்
சக உயிராய் எண்ணாமல் 
சாதிமட்டும் பார்ப்பீரோ
உன்னைப்போல் அவருடலும்
தசையெலும்பு உதிரமென்று
ஆனதுதான் புரியாதா
உன்தாயாய் தெரியாதா

உடையில்லா பாவிமகள்
உடமைகளைத் தூளாக்கி
பெற்றினயோ இன்பம் உனைப்
பற்றட்டும் பெருங்குன்மம்
☹️☹️☹️☹️

Post Bottom Ad