ஏமாற்றமடைந்த சிறுவனுக்கு இன்பதிர்ச்சி தந்த ராகுல் காந்தி - Neerthirai

Breaking

Post Top Ad

ஏமாற்றமடைந்த சிறுவனுக்கு இன்பதிர்ச்சி தந்த ராகுல் காந்தி

கேரளாவில் தன்னை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த சிறுவனுக்கு தொலைபேசியில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ராகுல் காந்தி.

பரப்புரையின் போது தன்னை பார்க்காமல் முடியாமல் ஏமாந்து போன கேரளா சிறுவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி ஆச்சர்யம் அளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி என இரு மக்களவைத் தொகுதிகளிலிருந்து போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு கடந்த 17-ம் கேரளாவின் கண்ணூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் ராகுல். அப்போது அவரை நேரில் சந்தித்துப் பேசி கண்ணூரை சேர்ந்து நந்தன் என்ற ஏழு வயது சிறுவன் முயற்சி செய்தான். 

னது பெற்றோருடன் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக, ’எனக்கு மிகவும் பிடித்தவர் ராகுல்’ என்ற பதாகையை ஏந்தியவாறு சிறுவன் காத்திருந்த நிலையில், ராகுல் காந்தி அவனால் பார்க்க முடியாமல் போனது. இதனால் அந்த கூட்டத்தில் இதை கூறி கதறி அழத் தொடங்கினார். 

பெற்றோர்கள் அவனை சமாதானம் செய்ய பல முறை முயன்றும் முடியவில்லை. அப்போது சிறுவனின் தந்தை, அவன் அழுத புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கேரளா காங்கிரஸ் தரப்பிலிருந்து ராகுலுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே ராகுல் காந்தி சிறுவன் நந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது சிறுவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதை தொடர்ந்து ராகுலுக்கு நன்றி தெரிவித்து புதிய வீடியோ ஒன்றையும் நந்தன் வெளியிட்டான். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும், சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

Post Bottom Ad