234 தொகுதிகளிலும் தனித்தே நிற்பார்... ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா தகவல்!! - Neerthirai

Breaking

Post Top Ad

234 தொகுதிகளிலும் தனித்தே நிற்பார்... ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா தகவல்!!


பிஜேபி ரஜினியை இயக்குவதாக கூறுவது உண்மையில்லை   என்றார். வரவுள்ள சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் ரஜினி தனித்தே நிற்பார் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா. 
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் தன்னை நம்பிய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் அறிவித்தார். இதனால் ரஜினியின் மக்கள் மன்றம் வேகமெடுத்தது. அதையடுத்து சில நாட்களில் மீடியாவை சந்தித்த ரஜினியின் அண்ணன்  சத்யநாராயணா, ரஜினி உள்ளாட்சித் தேர்தலிலும் பங்கேற்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், பிள்ளையார்பட்டியில் உள்ள கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்றத் தேர்தல்தான் ரஜினியின் இலக்கு. பிஜேபி ரஜினியை இயக்குவது என்று கூறுவது உண்மையில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ரஜினி தனித்தே நிற்பார். 
இந்த தேர்தல் அவருக்கு ஒரு அனுபவமாக இருக்கிறது. யார் யார் நிற்கிறார்கள். என்ன பேசுகிறார்கள். எங்கு போகிறார்கள் என்று கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வரட்டும். ஏற்கனவே சொல்லியிருக்கிறார் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று. நிச்சயமாக வருவார் என தெரிவித்தார். 

Post Bottom Ad