12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தலான மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்த சிறை கைதிகள் - Neerthirai

Breaking

Post Top Ad

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தலான மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்த சிறை கைதிகள்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்று தேர்வெழுதிய கொலை குற்றவாளி நான்கு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு மற்ற சிறைவாசிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கொலை குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் 4 கைதிகள், கடந்த வெள்ளியன்று வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், கொலை குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் 4 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் எஸ். செந்தில் முருகன் (38) 600-க்கு 416 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். 

தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. மொத்தம் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.07% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாநிலம் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் சிலரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். அதில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் கொலை குற்றத்திற்கான தண்டனை பெற்று வரும் 4 பேர் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ். செந்தில் முருகன் (38) 600-க்கு 416 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளனர். அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆர். பால்பாண்டி (37) 351 மதிப்பெண்களும், கடலூரை சேர்ந்த என். கதிரவன் (28) 321 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 

மேலும், காமர்ஸ் பாடத்தில் தோல்வி அடைந்த நிலையில், வி. சத்யராஜ் (32) என்பவர் மறுதேர்வு எழுதினார். அவரும் தற்போது வெளியிடப்பட்டுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

Post Bottom Ad