Neerhirai

Breaking

Fashion

News

உலகம்

Post Top Ad

Recent Posts

View More

Thursday, 7 November 2019

அப்பா, அம்மா விவாகரத்து செய்ததில் மகிழ்ச்சியே: ஸ்ருதி ஹாஸன்


சினிமாவில் இருந்து குட்டி பிரேக் எடுத்த ஸ்ருதி ஹாஸன் தற்போது மீண்டும் படங்களில் பிசியாகிவிட்டார். காதல் முறிவு ஏற்பட்ட பிறகு அதை நினைத்து அழுது கொண்டே இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துவிட்டார் ஸ்ருதி.

இந்நிலையில் அவர் தனது கெரியர், பெற்றோர் பற்றி பேட்டி ஒன்றில் கூறியதாவது,

பெற்றோர்கள் ஒன்றாக இருந்தாலும் வலி என்பது தவிர்க்க முடியாதது. வலி என்பது வாழ்க்கையின் ஒரு பாகம். அப்பா, அம்மா பிரிந்தது மற்றவர்களுக்கு தான் செய்தி. வீட்டில் உள்ளவர்களுக்கு அது செய்தி அல்ல.

அவர்கள் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி தான். ஏனென்றால் அவர்கள் இருவருமே அருமையானவர்கள். இருவரும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

எந்த இரண்டு பேர் பிரிந்து சென்றாலும் அது கவலையான விஷயம் தான். ஒரு உறவில் எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றால் அதை ஒட்ட வைக்க நினைக்க வேண்டாம். ஏனென்றால் ஒரு புயல் அடித்தால் எல்லாம் சிதறிவிடும். அதனால் பிரிவதே சிறந்தது.

அது வெளி உலகிற்கு பிரிவாகத் தெரியும். ஆனால் நாம் அதற்கு ஏற்கனவே தயாராகிவிடுவோம் என்றார்.

ஸ்ருதி லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். அவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் பிரிந்துவிட்டனர். காதல் முறிந்தாலும் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம் என்று மைக்கேல் கார்சேல் தெரிவித்துள்ளார். காதல் முறிவை அவர் தான் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம்: பெண் துணை ஆட்சியரை அறைந்த இளைஞர் கைது!

தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் டெங்கு விழிப்புணர்வு பணி நடைபெற்றது. அங்குள்ள கூணான்டியூர் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுடன், மாவட்டத் திட்ட அலுவலரும் துணை ஆட்சியருமான சுசிலா ராணி டெங்கு விழிப்புணர்வு பணியை நேற்று (நவம்பர் 6) மேற்கொண்டார். சுகாதாரப் பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் இந்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்ற இளைஞர் எதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துகின்றனர் என துணை ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார். அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை ஏன் மாணவர்கள் மீது திணிக்கிறீர்கள், இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படாதா என அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில்தான் பள்ளி மாணவர்களைக் கொண்டு டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபடுவதாக துணை ஆட்சியர் சுசிலா ராணி விளக்கமளித்துள்ளார்.

துணை ஆட்சியரின் விளக்கத்தை ஏற்க மறுத்த பிரபாகர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு அதை பிரபாகர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது பிரபாகரின் செல்போனை துணை ஆட்சியர் தட்டிவிட, ஆத்திரமடைந்த பிரபாகர் துணை ஆட்சியர் சுசிலா ராணியைக் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் காயமடைந்த துணை ஆட்சியர் சுசிலா ராணி ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார். அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபாகரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Daily Horoscope, November 07th :இன்றைய ராசிபலன் (07 நவம்பர் 2019)


மேஷ ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் துவங்கினால் அதை வெற்றிகரமாக வாய்ப்பு உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியும் இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் குடும்பத்துடன் சென்று வர வாய்ப்பு உண்டாகும்.

சுப காரிய முயற்சிகளில் சென்று வருவீர்கள் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வார்கள் நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி உண்டாகும் ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது எதிர்கால முதலீடு போன்றவற்றைப் பற்றி திட்டமிடுவார்கள் இவற்றில் வெற்றி கிடைக்கும் பல புதிய வழிகளில் தென்படும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று கால தாமதம் ஆகி நல்ல தகவல்கள் கிடைக்கும்.

ரிஷப ராசி:

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பீர்கள் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி அன்யோன்யம் சிறப்பாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு விருந்தினர் வருதல் இவற்றால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.

குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் இவை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளலாம் மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும் ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது வாகனங்கள் வாங்குவது இவற்றிற்காக கடன் பெற வேண்டியது வரலாம்.

வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் பலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு பிரயாணங்களால் நன்மையே கிடைக்கும் ஆகவே தைரியமாக பிரயாணங்களை மேற்கொள்ளலாம் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்வுக்கு வரும் காதல் தொடர்பான பிரச்சினைகளில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல நாளாகும்.

மிதுன ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும் உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள் ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு மற்றும் தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைத்தல் போன்ற மகிழ்ச்சியான நாடாக இன்றைய நாள் செல்லும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடைய தாக இருக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வசூலாகும் புதிய கடன்களை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு கடன் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்களுடைய உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள் இவைகளில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் பல நாட்களாகத் தாமதப்படுத்தப்பட்டு வந்த காரியங்களையும் முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள்.

கடக ராசி:

இந்த நாள் இனிமையாக நாள் ஆகும் வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் தாய் நாடுகளைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும் எதிர்காலத்திற்கான முதலீடு செய்வது பற்றிய எண்ணங்களும் செயல்பாடுகளும் இருப்பீர்கள் இவற்றில் வெற்றி பெறுவீர்கள் மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும் உயர்கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வார்கள்.

ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் உண்டாகும்

சிம்ம ராசி:

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும் குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் சகோதர சகோதரிகளுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறைவதற்கான நாள்.

உயர்கல்வி கற்ற கொண்டிருப்பவர்கள் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் ஆகியோருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும் எதிர்பாராத தனவரவு உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடிவதாக இருக்கும் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வார்கள்.

கன்னி ராசி:

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும் கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவற்றால் எதிர் காலம் சிறப்பாக அமையும்.

கல்வியை முடித்து வேலை வாய்ப்பை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வர தாமதமாகும் இருப்பினும் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அதி விரைவில் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அவை தொடர்பான காரியங்களை தற்போது துவக்கலாம் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல தீர்வுக்கு வருவீர்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வழியாக கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு இதனால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி அடைவார்கள் உங்கள் கடின முயற்சியை நிர்வாகம் புரிந்துகொள்ளும் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வழிமுறைகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.

துலாம் ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும் அன்னியோன்னியம் அதிகரிக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பூர்வீக சொத்து தொடர்பான காரியங்கள் சற்று காலதாமதம் ஆகும்.

உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சற்று அனுசரித்து செல்ல வேண்டும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான செயல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிக ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் தங்கள் கல்வியை நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் துவக்குவதற்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.

கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை மனதில் மேலோங்கி நிற்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் ஒரு தீர்வுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு.

வழக்குகளில் வெற்றி அடைவீர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள் சொந்தத் தொழில் முயற்சிகள் வெற்றியடையும் நீண்டகாலமாக உத்தியோகத்திலிருந்து வந்தவர்கள் புது தொழில்களைப் பற்றி சிந்திப்பார்கள் கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தென்படும் எதிர்பார்த்த சிபாரிசுகள் கிடைக்கும்.

தனுசு ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் மாணவர்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வார்கள் தொழில் வாய்ப்புகள் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கும் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீடுகளைப் எதிர்பார தனவரவு போன்றவை உண்டாகும் நாளாகும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும் கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும் அரசு தொடர்பான வேலைகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள் குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவது நண்பர்கள் அல்லது உறவினர்களின் வருகை அல்லது நீங்கள் குடும்பத்துடன் பயணம் செல்வது போன்றவைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்

மகர ராசி:

நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும் திறம்பட சமாளித்து நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள் எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து மகிழ்ச்சியை நிலைநாட்டுவர்.

குடும்பத்தில் அமைதி தவழும் குழந்தைகளால் செலவுகள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்ல வேண்டும். உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.

குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும் வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும் உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு புதிய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள்.

கும்ப ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.

பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் சற்று காலதாமதம் ஆகும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு காலதாமதமானாலும் வெற்றி கிடைக்கும் தன வரவு உண்டாகும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வார்கள்.

கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் இருப்பினும் அவற்றை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்

மீன ராசி:

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. படிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும், வெற்றி நிச்சயம்.

குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் அவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள் கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருந்து வரும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் பலருக்கு பிரயாணம் செய்ய வாய்ப்புகள் உண்டாகும் ஒரு சிலருக்கு வெளிநாட்டுப் பிரயாணங்கள் உண்டாகும் பயணங்களால் நன்மை கிடைக்கும் என்பதால் தைரியமாக பயணங்களை மேற்கொள்ளலாம்.

Tuesday, 5 November 2019

தாஜ்மஹாலுக்கு வந்த சோதனை!!
தலைநகர் டெல்லியில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள காற்று மாசால், உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, ஆக்ரா நகராட்சி நிர்வாகம் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முக்கியமாக, காற்றை சுத்தப்படுத்தும் இரண்டு நவீன கருவிகள் தாஜ்மஹாலின் நுழைவுவாயிலில் பொருத்தப்பட்டுள்ளன. இவை, எட்டு மணி நேரத்தில் 15 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு காற்றை சுத்தம் செய்யும் திறன் படைத்தவை.

Monday, 4 November 2019

இது என்னய்யா, விஜய் சேதுபதிக்கு புது சிக்கல்: நேரம் சரியில்லையோ?


தெலுங்கு படங்களில் பிற மொழி நடிகர்கள் அதிக அளவில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் குழு ஒன்று இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளது.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

தெலுங்கு பட உலகில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர். இதனால் தெலுங்கு குணசித்திர நடிகர்கள் வருமானம் இன்றி வீட்டு வாடகை கூட கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாளிலேயே தெலுங்கிலும் ரிலீசாகிறது. தமிழ் நாட்டில் தோல்வி அடையும் சில படங்கள் கூட ஆந்திராவில் வசூல் குவிக்கின்றன. ஆனாலும் தெலுங்கு நடிகர்களை தமிழ் படங்களில் அவர்கள் நடிக்க வைப்பது இல்லை. ஆனால் தெலுங்கு நடிகர்கள் தமிழ், கன்னடம், மலையாளத்தில் தங்கள் படங்கள் வியாபாரம் ஆக அங்குள்ள நடிகர்களை இறக்குமதி செய்கிறார்கள்.

சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவி கிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

பிரபாஸ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் அவரைத் தவிர யாருமே தெலுங்கு பேசுபவர்கள் இல்லை. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் பிறமொழி நடிகர், நடிகைகளே அதிகம் இருந்தனர்.
தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபாத்திரங்களுக்கும் பிறமொழிகாரர்களையே அழைக்கின்றனர். அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால் தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி அல்லு அர்ஜுனின் ஏஏ20 படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இப்படி ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கறிவேப்பிலைக் குழம்பு (பிரசவக் குழம்பு)

கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள் :

கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை. இலேசான காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. மருந்தாகச் சாப்பிட்டுவர, பசியை அதிகமாக்கும், உடலை வலுவாக்கும், குடல் வாயுவை வெளியேற்றும். மேலும், இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு.

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை ; கைப்பிடி அளவு,

கடலைப்பருப்பு ; ஒரு டீஸ்பூன்,

மிளகு 10,

காய்ந்த மிளகாய் ; 2,

உளுத்தம்பருப்பு ; ஒரு டீஸ்பூன்,

துவரம்பருப்பு ; ஒரு டீஸ்பூன்,

புளி – ஒரு நெல்லிக்காய் அளவு,

சீரகம் ; ஒரு டீஸ்பூன்,

கடுகு ; அரை டீஸ்பூன்,

நல்லெண்ணெய் ; 100 மில்லி,

உப்பு ; தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ; மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு; கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி!

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபியை, நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!!

தேவையானவை:

கோதுமை மாவு - கால் கிலோ, 
பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன், நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் (ஒரு கைப்பிடி), சின்ன வெங்காயம் – 7, பச்சைமிளகாய் – ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, தயிர் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்.

(குறிப்பு: வாழைப்பூ சீக்கிரத்தில் கறுத்துவிடும். எனவே, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.)

பாலாற்றில் மரணக் குழிகள்... பறிபோன மூன்று உயிர்கள் !!

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே எடையத்தூர் கிராமத்தை சேர்ந்த இராமசாமி என்பவரது மகன் செல்வகுமார் (வயது 17). பாண்டூர் கிராமத்தில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இவர், இவரது தம்பி ரமேஷ், உறவினரின் மகன் யுகேஷ் (வயது 12 ) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள பாலாற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் சுழலில் சிக்கியுள்ளனர்.

இதில் செல்வகுமார், யுகேஷ் ஆகியோர் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு அவரை அருகில் இருந்த கிராம மக்கள் மீட்டனர்.

உயிரிழந்த செல்வகுமார், யுகேஷ் ஆகியோரின் உடலை மீட்ட திருக்கழுகுன்றம் தீயணைப்பு துறையினர், அவற்றை  உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து திருகழுக்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாலாற்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டால், கடந்த வாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக அங்கங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

அதில் தண்ணீர் தேங்குவதை அறியாத சிறுவர்கள், பள்ளங்கள் இருப்பதை அறியாமல் அந்தப் பகுதிகளுக்கு குளிக்கச் செல்லும்போது மரண குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

மாஞ்சா நூலுக்கு பலியான குழந்தை - சென்னையில் நடந்த பயங்கரம்!

மிகவும் வலிமை வாய்ந்ததாக விளங்கும் மாஞ்சா நூல் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பட்டம் விடும் போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இருப்பினும் மாஞ்சா நூல் பயன்பாட்டை மக்கள் நிறுத்தியபாடில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால்.

இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், அபிமன்யு என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் நேற்று தனது மனைவி, மகனுடன் கொருக்குபேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

இவர்களின் மோட்டார் சைக்கிள் பயணம் எத்தகைய சோகமான விஷயத்தில் முடிந்துள்ளது தெரியுமா? மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்ற போது, காற்றில் மாஞ்சா நூல் பறந்து வந்தது.

அப்போது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தை மாஞ்சா நூல் வெட்டியது. இதைக் கண்ட பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகிலிருந்த ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்துவிட்டு, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். வடசென்னை பகுதியில் மாஞ்சா நூல் பயன்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.

கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த 5 வயது சிறுமி அடித்து கொலை..! நெய்வேலியில் பரபரப்பு..

இதையடுத்து தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் மாஞ்சா நூல் காற்றாடி குறித்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Sunday, 3 November 2019

சூரி புது ஹோட்டலுக்கு விசிட் அடித்த மக்கள் செல்வன்!

சினிமாவில் உள்ள பிரபலங்கள் நடிப்பையும் தாண்டி தனிப்பட்ட முறையில் எதாவது ஒரு தொழிலைச் செய்து வருகின்றனர்.

அதிலும் பெரும்பாலானோர் ஹோட்டல் அல்லது உணவகம் தான் வைத்துள்ளனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் துவங்கி நடத்தி வருகிறார்.

அது அந்த ஊர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தனது உணவக கிளைகளைப் பெருக்க வேண்டி “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்று இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவங்கினர்.

அதை சூரியின் நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் சூரியின் இந்த புதிய இரண்டு ஹோட்டலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்துள்ளார். ஒரு வருடத்திற்கு 5 முதல் 8 படங்கள் வரை கொடுப்பவர் விஜய் சேதுபதி. அப்படி பிஸியாக ஷூட்டிங்கில் இருக்கும் போது கூட இப்படி நேரத்தை ஒதுக்கி சென்று நண்பனுக்காகப் பார்த்துள்ளார்.

இதனால் தான் அவர் எப்போதும் மக்கள் செல்வன் என அழைக்கப்படுகிறார் . மேலும் சூரி ஹோட்டலின் மெனு கார்டு அல்லது உணவின் விலை தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

sigma2

Post Bottom Ad